கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரிய குமார் யாதவ் (Suriya Kumar Yadav) போலவே சிறுமி ஒருவர் பேட்டிங் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் நாம் சுற்றிவரும் போது சில பதிவுகள் ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். அதுவும், சிறுவர்களில் அசாத்தியமான திறமைகளை வெளிப்படுத்தும் சில வீடியோக்கள் பலராலும் பகிரப்பட்டு பாராட்டுக்களையும் பெறும்.
இது போன்ற ஒரு வீடியோ தான் சமூக வலைத் தளங்களை ஆக்கிரமித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் டி20 போட்டிகளின் அதிரடி பேட்ஸ்மேனான சூரிய குமார் யாதவ், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை T20 தொடரில் 239 ரன்கள் விளாசி இருந்தார்.
தொடர்ந்து, நியூசிலாந்து அணியுடனான தொடரிலும் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். இந்நிலையில், அச்சு அசல் சூரிய குமார் யாதவ் (Suriya Kumar Yadav) போலவே பேட்டிங் செய்யும் சிறுமி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
14 வயதான முமல் மெஹர் என்னும் இந்த சிறுமி தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். அப்போது, பந்துகளை 360 டிகிரியில் விளாசுகிறார். இந்த சிறுமி ராஜஸ்தானின் பார்மர் பகுதியை சேர்ந்தவர். சிறுமியின் இந்த வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
ये वीडियो राजस्थान की बताई जा रही है। जिस तरह ये बेटी शॉट्स लगा रही है इसकी बैटिंग में सूर्यकुमार यादव की झलक है। ऐसे टैलेंट को प्रमोट कर अच्छी ट्रेनिंग मिलनी चाहिए। @ashokgehlot51 जी, इस बच्ची के टैलेंट को सही मंच दिलाएँ जिससे ये एक दिन देश की जर्सी पहने। pic.twitter.com/vd1TkhVeVt
— Swati Maliwal (@SwatiJaiHind) February 13, 2023
மேலும், அந்த பதிவில்,”நேற்று தான் ஏலம் முடிவடைந்தது. இன்றே போட்டிகள் துவங்கிவிட்டதா? உன்னுடைய பேட்டிங்கை கண்டு ரசித்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்றதை குறிப்பிட்டு சச்சின் எழுதி இருந்த இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவில் இந்த சிறுமி இந்திய அணிக்காக விளையாட வாய்ப்புகளை வழங்கும்படி ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிடம் அவர் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.