இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதன் சாதனைகளை குறிக்கும் வகையில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ முன்முயற்சியின் கீழ் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. தேசத்துக்காகத் தங்கள் இன்னுயிரை துறந்த துணிச்சலான தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நாளை கொண்டாடபட்டு வருகிறது.இந்த நாளில் பல்வேறு தரப்பினர் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு, சமீபத்தில் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி பூமியின் குறைந்த தூர வட்டபாதையில் நிலைநிறுத்தியது. ஆசாதிசாட் என்ற பெயரிலான இந்த செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதன் அடையாளம் ஆக நாடு முழுவதிலும் இருந்து 750 மாணவிகள் பங்கு கொண்டனர்.
இந்தியாவுக்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்குடனும் மற்றும் குழந்தைகளிடையே எல்லைகளற்ற உலகு பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்குடனும், இந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
நாட்டின் சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின் ஒரு பகுதியாக, பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பலூன் ஒன்றின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்கவிடப்பட்டது.
இந்திய சுதந்திர தினத்திற்கு, சர்வதேச விண்வெளி மையத்தில் பணியாற்றும் விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோபோரெட்டி, இந்திய அமெரிக்கரான ராஜா சாரி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
அதன் சுயவிவரத்தின்படி, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா “எல்லையற்ற உலகத்திற்கான” விழிப்புணர்வை குழந்தைகளிடையே பரப்புகிறது. அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரத் துறையில் மாணவர்களுக்கான சர்வதேச அனுபவக் கற்றலை விரிவுபடுத்துவதைத் தவிர, உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திய உலகின் முதல் அமைப்பு இதுவாகும்.
அதன்படி, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா “எல்லையற்ற உலகத்திற்கான” குழந்தைகளிடையே விழிப்புணர்வைஏற்படுத்தும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரத் துறையில் மாணவர்களுக்கான சர்வதேச அனுபவக் கற்றலை விரிவுபடுத்தும் விதமாக பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பலூன் ஒன்றின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்க விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.