இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதம் உள்ள 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி (Indian team announcement) அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.
இதில் இந்திய அணி வென்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.
அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் 2 போட்டிகளில் விளையாடத விராட் கோலி இந்த தொடரில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
இதையும் படிங்க : palani murugan கோவிலில் காலாவதியான பிரசாதம்! – உணவு பாதுகாப்புத்துறை அதிரடி
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய இந்த 13 வருடங்களில் ஒரு டெஸ்ட் தொடர் முழுவதும் விளையாடாமல் இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் முதுகு வலி காயத்தால் அவதிப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் எஞ்சிய தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி இன்று (பிப்.10) அறிவிக்கப்பட்டுள்ளது.
3 போட்டிகளுக்கான இந்திய அணி (Indian team announcement) வீரர்கள் பட்டியல்
- ரோஹித் சர்மா (கேப்டன்)
- ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்)
- யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- சுப்மன் கில்
- கே.எல். ராகுல்
- ரஜத் படிதார்
- சர்பராஸ் கான்
- துருவ் ஜூரல்
- கே.எஸ். பாரத்
- ஆர். அஷ்வின்
- ரவீந்திர ஜடேஜா
- அக்சர் படேல்
- வாஷிங்டன் சுந்தர்
- குல்தீப் யாதவ்
- முகமது சிராஜ்
- முகேஷ் குமார்
- ஆகாஷ் தீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.