விமானத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்காக இண்டிகோ நிறுவனம் புதிய ( indigo airlines ) ஏற்பாடு செய்துள்ளது.
தனியாக விமானத்தில் பயணிக்கும் பெண்கள், தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பெண் பயணிகளின் அருகிலேயே இருக்கையைத் தேர்வு செய்துகொள்ளும் வசதியை இண்டிகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
Also Read : சென்னையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை..!!
பெண் பயணிகளின் பயண அனுபவத்தை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இண்டிகோ நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்த முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுநாள் வரை பேருந்துகளில் இருந்து வந்த இந்த வசதியை இண்டிகோ நிறுவனம் கையில் எடுத்திருப்பது அதிக பெண் பயணிகளை ஈர்த்துள்ளதாகவும் இதனால் பெண் பயணிகள் பாதுகாப்பாகவும் பயணிப்பார்கள் என்றும் ( indigo airlines ) பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்