இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 3 வது மற்றும் கடைசி t20 போட்டி நேற்று இந்தூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்த போட்டியில் விராட் கோலி, மற்றும் ராகுலுக்கு ஓய்வு குடுக்கப்பட்டது. ஆட்டத்தை ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான கேப்டன் பவுமா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த ருசவ் நல்ல சிறப்பான ஆட்டத்தை குடுத்தனர். ஒரு முனையில் டிகாக் நிதானமாக விளையாட, ரூசவ் இந்திய பந்து வீச்சை நான்கா திசைக்கும் விரட்டினார். இதனால் 12 ஓவர் முடிவில் அந்த அணி 121 ரன்கள் சேர்த்தது. டிகாக் 43 பந்துகளில் 68 ரன்கள் கடந்து அவுட் ஆனார். பின்னர் அதிரடியில் மிரட்டிய ரூசவ் 48யே பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இது சர்வதேச t20 போட்டியில் அவர் அடிக்கும் முதல் சதமாகும். இறுதியில் மில்லர் 5 பந்தில் 19 ரன்கள் குவிக்க 20 ஓவர் முடிவில் அந்த அணி 227 ரன்கள் குவித்தது. பின்னர் 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா எதிர்கொண்ட 2 வது பந்தில் டக் அவுட் ஆனார். ஷ்ரேயாஸ் ஐயரும் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் பண்ட், தினேஷ் கர்த்திக் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. வழக்கம் போல தினேஷ் கார்த்திக் தனது அதிரடி பாணியை தொடர்ந்தார். 21 பந்தில் 46 குவித்து மிரளவைத்தார். பண்ட் 27 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க அணி சரிய தொடங்கியது. பின்னர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கில் வெளியேற. இறுதில் தீபக் சாகர் மட்டும் 31 ரன்கள் சேர்த்தார் முடிவில் இந்திய அணி 178 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 49 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. சதம் விளாசிய ரூசவ் ஆட்டநாயகனாக தேரவூ செய்யபட்டார்.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. தொடர் நாயகனாக சூர்ய குமார் யாதவ் தேர்வு செய்யபட்டார். அடுத்து இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் ஒருநாள் தொடர் 6 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் ஆரம்பமாகவுள்ளது.