அதிமுக பொதுக்குழுவை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவை கூட்ட சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து பொதுக்குழு தீர்மானத்தை வாசித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார். இதனை தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான கட்சி சட்ட விதி 20அ- ஐ மாற்றம் செய்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு பதில் கழக பொதுச்செயலாளர் என்று விதி திருத்தம் செய்யப்பட்டது .
அதிமுகவில் இருந்து வந்த கழக ஆலோசனைக்குழு இன்றுமுதல் நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.