ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டு ( Iran president ) மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடங்கள் தகவல் தெரிவித்தன.
ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக கூறப்படும் நிலையில் ஹெலிகாப்டரை தேடும் பணிகளை முடுக்கிவிடப்பட்டது.
மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல் ஏற்படித்திருந்த நிலையில் டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரபடுத்தப்பட்டது.
Also Read : மக்களவைத் தேர்தலின் 5ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்..!!
இதையடுத்து ட்ரான் உதவியுடன் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த இடத்தை நோக்கி மீட்புக்குழு விரைந்தது.
இந்நிலையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது .
விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், ( Iran president ) அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.