8 வது t20 உலககோப்பை போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றான தகுதி சுற்று போட்டிகள் நடை பெற்று வருகிறது.இன்று நடைபெற்ற போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்கொட்லாந்து, அயர்லாந்து( ireland ) அணிகள் பலபரீட்சை செய்தன. டாஸ் வென்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய தொடக்க வீரரான முன்சே 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோன்ஸ் மற்றும் க்ராஸ் அணியின் ஸ்கோரை நிலைபடுத்தினர். 21 பந்துகளில் 28 சேர்த்தபோது க்ராஸ் அவுட் ஆனார். பின்பு ஜோன்சுடன் இனைந்த கேப்டன் பெரிங்க்டன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
27 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சர் என 37 ரன்கள் சேர்த்து சீரான இடைவெளியில் அவுட் ஆனார். ஜோன்சின் அதிரடியால் ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 170 குவித்தது. நிலைத்து ஆடிய ஜோன்ஸ் 55 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 86 ரன்கள் சேர்க்க ஸ்கொட்லாந்து வலுவான ஸ்கோரை அமைத்தது. அயர்லாந்து அணியின் காம்பர் 2 விக்கெட்டை கைபற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியாது. அணியின் முன் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேற அயர்லாந்து அணி 60 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து திணறியது. ஆனால் பின்பு வந்த காம்பர், டாக்கர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
இந்த இணை 57 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் 19 ஓவர் முடிவில் இலக்கான 180 ரன்களை எட்டியது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து( ireland ) வெற்றி பெற்றது. காம்பர் 32 பந்தில் அதிரடியாக 72 ரன்கள் சேர்த்தார். ஆட்டநாயகன் விருதையும் அவர் தட்டி சென்றார்.