கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை விரைவில் ராஜினானா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்த வாரம் லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பார் என்று க்ளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் பிரதமர் பதவியில் இருந்தும் விலக நேரிடும். இதையடுத்து பல கட்ட ஆலோசனைகளுக்கு பின் புதிதாக தேர்வு செய்யப்படும் கட்சி தலைவரே கனடாவின் புதிய பிரதமராவார்.
இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ட்ரம்ப்-க்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டிலும் கண்டன குரல்கள் வலுத்து வந்தன.
Also Read : தனிமையை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் – ஆய்வில் வெளியான தகவல்..!!
இதேபோல் கனடா பொருளாதாரம் கடும் சவால்களை சந்தித்துள்ள நிலையில், ஆளும் கட்சி மட்டுமன்றி, எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் ட்ரூடோ ராஜினாமா செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து கடும் நெருக்கடியை சந்தித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ இந்த வார இறுதியில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.