90-களில் மிகவும் மக்களை கவரும் வகையில் எதார்த்தமான படங்களை தந்தவர் நடிகரும் , இயக்குனருமான டி . ராஜேந்திரன். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர்.
தமிழ் திரை உலகில் தனக்கு என ஒரு அங்கீகாரத்தை உருவாக்கியவர்.மக்களால் செல்லமாக T .R என அழைக்கப்பட்டார். இவரது மகன் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். கடந்த சில தினங்களுக்கு டி . ராஜேந்திரன் முன் கடுமையான உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
இதனை அடுத்து அவரது உடல்நிலை குறித்து அவரது மகன் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் , தனது தந்தைக்கு வயிற்றில் ரத்த கசிவு ஏற்பாட்டதாகவும் ,தந்து தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க வெளிநாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டி . ராஜேந்திரன் இந்த தீடீர் உடல்நல குறைவு தமிழ் சினிமா மற்றும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சி நடிகை ஒருவர் தன்னை சிம்பு லவ் டார்ச்சர் கொடுப்பதாக கூறி,அவரது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால்தான் டி .ராஜேந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால், டி .ராஜேந்திரன் உடல்நிலை குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.