நிலவில் இந்தியா நடைபயணம் என நிலவில் ரோவர் நகருவதை குறிப்பிட்டு இஸ்ரோ(isro) ட்வீட் செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில்கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-3, விண்ணில் ஏவப்பட்டது.
கிட்டத்தட்ட 40 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் தென் துருவத்தில் நேற்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. பிறகு திட்டமிட்டபடி விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவரும் நிலவில் கால் பதித்தது.
மேலும் 6 சக்கரங்கள் கொண்ட ரோவர், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று 14 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும்,நாள்தோறும் 50 மீட்டர் வீதம் மொத்தம் 500 மீட்டர் வரை பயணித்து பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தரையிறங்கிய போது velocity கேமரா மூலம் விக்ரம் லேண்டர் எடுக்கப்பட்ட படங்களையும் இஸ்ரோ வெளியிட்டு,நிலவில் இந்தியா நடைபயணம் என நிலவில் ரோவர் நகருவதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளது.