வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கல் பண்டிகை (Pongal festival) வரும் நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையாக 1500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் பொருட்களுடன் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் வர உள்ள நிலையில், பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு (Pongal festival) ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பொருடகள் தரமாக இல்லையென புகார் வந்ததையடுத்து 1000 ரூபாய் ரொக்க பணம் மற்றும் கரும்பும் வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டும் பரிசு பொருட்கள் இல்லாமல் பணமாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 1000 ரூபாயை அதிகரித்து வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் 2.19 கோடி ரேஷன் கார்டு அட்டைதார்களுக்கு 1500 முதல் 2000 ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பொங்கலுக்கு 1 வாரத்திற்க்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகை அதிகரித்து வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.