கருணாநிதி பேனா (Kalaignar Pen Statue) தமிழக மக்களின் எதிராக பயன்படுத்திய பேனா என்றும் தமிழர்களின் அடையாளங்களை அழித்த பேனா இதற்க்கு சிலை அவசியமா ..? என்று புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் மூர்த்தி தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு கடந்த மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 39 கோடி ரூபாய் செலவில் கருணாநிதியின் பேனா (penstatue)நினைவிடம் கட்டப்பட்டும் என்று தெரிவிக்கபட்ட சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியில் தலைவர் சீமான் ,” நீங்கள் சிலை வைத்து பாருங்கள் அதை நாங்கள் உடைத்து காட்டுகிறோம் என்று மேடையில் திமுகவினரை பார்த்து சவால் விட்டிருந்தார்.
இதற்க்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக,முக்குழுத்தோர் புலிகள் கட்சியின் தலைவர் சரவணதேவர் ஆதரவு தெரிவித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு சார்பில் நடந்து கொண்டு இருக்கின்ற நிலையில் நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பேனா ஒன்றை 134 அடி உயரத்தில் நடுக்கடலில் அமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் மெரினா கடலில் சிலை வைபதற்க்கு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பாக பிரபல இணையதள ஊடகமாக இருப்பது i tamil வலைத்தளத்திற்கு புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் மூர்த்தி அண்மையில் நேர்காணல் ஒன்றை நடத்தி இருந்தார். அப்போது, நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதை இந்த பதிவில் காணலாம்.