மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், தங்களது பள்ளிக்குச் செல்ல நல்ல சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சிறுமி காஜல் என்ற மாற்றுத்திறனாளி மாணவியான இவர், ஃபங்யால் பஞ்சாயத்து நிர்வாக எல்லைக்குட்பட்ட மெல்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்தான் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் இப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் உட்பட மொத்தம் 101 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் ஒரே அணுகு சாலை தற்போது வாகனம் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது. இதனால், மாணவர்கள் பள்ளிக்கு நடந்து செல்வதை தவிர வேறு வழியில்லை. அப்போது, விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் நிலவுகிறது.
எனவே, பிரதமர் மோடிக்கு காஜல் எழுதி இருக்கும் கடிதத்தில், “நான் உதம்பூர் மாவட்டத்தின் ஃபங்யால் பஞ்சாயத்து நிர்வாக எல்லைக்குள் வரும் மெல்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கிறேன். எங்களது பள்ளிக்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருக்கிறது.
இதனால் நான் பலமுறை கீழே விழுந்திருக்கிறேன். எனவே, நானும், எனது நண்பர்களும் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில், பள்ளிக்குச் செல்ல நல்ல சாலையை ஏற்படுத்தித் தருமாறு உங்களை பிரதமர் மோடி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதி இருந்தார்.
பிரதமர் மோடி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், உதம்பூர் மாவட்ட உதவி வளர்ச்சி ஆணையர் ரஞ்ஜித் சிங் கோட்வாலின் கவனத்திற்குச் சென்றது.
அப்போது பள்ளிக்குச் செல்லும் சாலை உட்பட பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய ஏற்பாடு செய்யபடும் என்று தெரிவித்தார்.தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.