மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன்(January 19th)
மேஷம் :
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும்.
முருகப்பெருமானை வழிபட வேண்டும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை.
நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.
இதையும் படிங்க : எகிறியது தங்கம் விலை?
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. துர்கை வழிபாடு மகிழ்ச்சி தரும்.
கடகம் :
முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
வெங்கடேச பெருமாளை வழிபடுவது நன்மை.
சிம்மம் :
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தட்சிணா மூர்த்தியை வழிபட தடைகள் விலகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கன்னி :
வாழ்க்கைத் துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவதன் நற்பலன்கள் அதிகரிக்கும்.
துலாம் :
பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். நரசிம்மரை வழிபட தடைகள் விலகும்.
விருச்சிகம் :
தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி பெறலாம்.
தனுசு :
சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்.
மகரம் :
மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும். அம்பிகையை வழிபட நன்மை தரும்.
கும்பம் :
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் நாள். பெற்றோர் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். இன்று விநாயகரை வழிபட நன்மைகள் உண்டாகும்.
மீனம் :
வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
இதையும் படிங்க : பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சரபேஸ்வரரை வழிபட மகிழ்ச்சி பெருகும்(January 19th).