திமுகவின் முப்பெரும் விழாவில் பெரியார் ,அண்ணா படங்களை தவிர்த்து முக ஸ்டாலின் உதயநிதி இன்ப நதி ஆகியோர் படங்களை தான் முப்பெரும் விழா கொண்டபாடப்படுகிறது என ஜெயக்குமார்(Jayakumar) விமர்சித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர்,அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேரன் இந்த நிதி கலந்து கொண்டது விதியை மீறிய செயல் எனவும் திமுக குடும்ப நலனை முதன்மையாக வைத்து செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
அண்மையில்,கோவையில் செம்மொழி மாநாட்டிலும் தமிழ் அறிஞர்கள் பின் வரிசையில் தள்ளப்பட்டு முன் வரிசையில் அப்போது முதலமைச்சரான கலைஞர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் இருந்ததாக குற்றம் சாட்டினார் தமிழ் அறிஞர்களை திமுக எப்போதும் மதித்ததில்லை என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர்,திமுகவினர் முப்பெரும் விழா என கூறிவிட்டு பெரியார் அண்ணா ஆகியோரின் படங்களை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இத்தகைய படங்களை தவிர்த்து விட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் உதயநிதி இன்ப நதி ஆகியோர் படங்களை தான் முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் ஊழலை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும் சர்க்காரியா கமிஷன் முதல் கொண்டே சர்க்கரை ஊழல், வீராணம் ஏரி குழாய் ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்தது திமுக ஆட்சி தான் எனவும் நாட்டிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டதும் திமுக ஆட்சி தான் எனவும் தெரிவித்தார்.