UGC issue-பாஜக ஆட்சிக்கு வந்தால், ஓபிசி -எஸ்சி -எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடில் ‘‘தகுதியானவர்கள்’’ கிடைக்காவிட்டால், பொதுப் பிரிவாக அறிவிப்போம் என்று பாஜக
தெரிவித்தற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், சமூகநீதி – கல்வி ரீதியாக இட ஒதுக்கீடு என்பதை மாற்றும் தந்திரம்!
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற மனுதர்ம ஆட்சியில் இட ஒதுக்கீட்டை அறவே பறிக்கும் முயற்சியை பற்பல ரூபத்தில்,
படிப்படியாக அமல்படுத்தி உயர்ஜாதியினரான பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள முன்னேறிய வகுப்பினர் நலனைப் பாதுகாக்கும் ஆட்சியாகவே
இந்த 10 ஆண்டு கொடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாகவே நடைபெற்றும்,
3 ம் முறையும் ‘இராமர் பக்தி’ என்ற மயக்க மருந்தினை – பாமர வாக்காளர்களுக்குத் தந்து, அவர்களிடம் உள்ள வாக்குகளைப் பறிக்க பக்தி என்ற பகல் வேஷம் கட்டி ஆடுகிறது!
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1752201948206706885?s=20
சமூகநீதிப்படி சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ள எஸ்.சி., எஸ்.டி., பழங்குடியினர், ஆதிதிராவிடர் ஆகியவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை மாற்றி, அதன் வேரில்
வெந்நீர் ஊற்றுவதுபோல் EWS என்ற ‘பொருளாதாரத்தில் நலிந்த’ முன்னேறிய உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 % இட ஒதுக்கீடு கல்வியிலும், உத்தியோகங்களிலும் தனி ஒதுக்கீடு
தந்து, ‘புளியேப்பக்காரர்களுக்கு’ மேலும் அஜீரணம் உண்டாகும் வண்ணம், தனியே ஒரு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நுழைத்தனர்; தங்களிடம் உள்ள புல்டோசர் மெஜாரிட்டியை
பயன்படுத்தி, இரண்டு, மூன்று நாள்களிலேயே அதனை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, புயல் வேகத்தில் சட்டமாக்கியதோடு, அவசர அவசரமாக அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கினார்கள்.
இதையும் படிங்க :vice president visit-சிதம்பரம் நடராஜர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் தரிசனம் !
இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் புதிய திட்டம்!
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒன்று மட்டும் அதை அமல்படுத்தவிடாது சமூகநீதியை ஊனப்படுத்தாது தடுத்து வருகிறது.
இப்போது மற்றொரு பேரிடியைத் தந்து – நோட்டம் பார்ப்பதுபோல் – பல்கலைக் கழகங்களில்- உயர்கல்வி
நிறுவனங்களில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு – வழிகாட்டுதல்களை உருவாக்கியுள்ள பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ள திட்டத்தில்,
ஆழம் பார்க்கும் வேலை!
OBC, S.C,S.T ,பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ‘‘தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காவிட்டால்’’ அந்த இடங்களை ரத்து செய்து, பொது பிரிவாக
அறிவித்து, மற்ற பிரிவினரை – அதாவது உயர்ஜாதியினரை பணி நியமனம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது!
இதற்கு உடனடியாக சுனாமிபோல எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியதைக் கண்டு, ஒன்றிய கல்வி அமைச்சகம், இப்படி பொதுத் தேர்தல் சமயத்தில், இந்தப் பூனைக்குட்டியை
வெளியே விட்டுவிட்டதே – இந்த யு.ஜி.சி.(UGC issue)மூலம் நாம் இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு முக்கியக் கல்லாகப் பிடுங்கி எடுத்து, கட்டடத்தையே வீழ்த்திட போட்ட ரகசியத் திட்டம்
வெளியாகிவிட்டதே’ என்று புரிந்து, உடனடியாக இந்த அறிவிப்பு ‘வாபஸ்’ வாங்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளது.