சர்வதேச கபடி வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்குப் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சந்தீப் சிங்கை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
பஞ்சாபின் ஜலந்தர் அடுத்துள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் நேற்று திங்கள்கிழமை கபடிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த போட்டியைக் காண மைதானத்தில் பலரும் ஆர்வமாகக் குவிந்திருந்தனர். இந்தப் போட்டியில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற நட்சத்திர வீரர்களில் ஒருவரான சந்தீப் சிங் நங்கல் அம்பியன் கலந்து கொண்டு இருந்தார்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்குப் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சந்தீப் சிங்கை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சந்தீப் சிங் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் நகோடரில் உள்ள மல்லியன் குர்த் கிராமத்தில் போட்டி மைதானத்தில் இருந்து சந்தீப் வெளியே வந்தபோது, நான்கு பேர் கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தனர். மேலும் சந்தீப் சிங் மீது தலை மற்றும் மார்பு பகுதியில் மீது 8 முதல் 10 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவித்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்குப் புகுந்த மர்ம நபர்கள் சிலர் சந்தீப் சிங்கை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.