இந்தியாவின் 75வது சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் நடைப்பயணமாக்க நான்கு முனை சந்திப்பு சாலை வரை பாதயாத்திரை சென்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். வழியில் காந்தி சிலை ,ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
பின்னர் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளரிடம் கூறுகையில், காங்கிரஸ் கட்சி, பொதுவுடைமை, சோசிலியஸ்ட் கட்சிகள் சுதந்திரதினத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆர் எஸ் எஸ் பாஜகவினர் மூன்றாவது முறையாகச் சுதந்திர தினவிழாவினை கொண்டாடுவதை வரவேற்பதாகவும், தேசியக் கொடியை எந்த சொல்லும் பாஜகவினர் அதன் வரலாற்றை மறைப்பதாகக் கூறினார்.
வரலாற்றை மறைப்பதன் மூலம் சுதந்திர வரலாற்றை மறைப்பது தெளிவாக விளங்குவதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தலித் என்ற ஊராட்சி மன்ற தலைவர் சுதந்திர கொடியினை ஏற்றுவதற்காக அப்பகுதியினர் தடையாக இருந்துள்ளனர். இது சம்பந்தமாக முதலமைச்சருக்குப் புகார் சென்றவுடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தற்கு அண்ணாமலை குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதனம் என்பது பழமையைப் பாதுகாப்பது சனாதனத்திற்கு எதிராகக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடி வருகின்றனர். இந்தியாவில் இட ஒதுக்கீட்டினை கொண்டுவந்த கட்சி காங்கிரஸ்.
இட ஒதுக்கீட்டிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பினர் ஆதரவாகச் செயல்பட்டதில்லை.. 5 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்ற தீமையை 100 ஆண்டுகளில் காங்கிரஸ் மாற்றியுள்ளது. அண்ணாமலை சனாதனத்தைத் திரிக்கப் பார்ப்பதாகவும், கருத்து கனிப்புகள் எவ்வளவோ தோல்வி அடைந்துள்ளது..பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என சீ வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு வெளியிட்டது ஒரு கருத்து திணிப்பு எனத் தெரிவித்துள்ளார்.
காவல் துறை அதிகாரிகள் தவறு செய்தால் சர்வதிகாரியாக மாறுவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். *கள்ளக்குறிச்சி கனியார் வழக்கில் அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில் சிலர் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாக எடுத்தது. தமிழகத்திற்குப் பிரதமர் வந்தபோது தமிழக அரசு பேனர் வைத்தபோது பாஜகவினர் மோடியின் படத்தை அதில் ஒட்டியது ஏற்புடையது அல்ல என்றும் ஆளுநரின் அனைத்து கருத்துக்களை நாங்கள் எதிர்ப்பதில்லை ஒரு சில கருத்துகளுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
ஆளுநரைச் சந்தித்த ரஜியின் வார்த்தை என்பது அரசியல் பற்றிப் பேசினோம் என்று கூறுகிறார் ஆனால் என்ன பேசினோம் என்பதைக் கூற தவிர்க்கிறார். காங்கிரசைப் பொறுத்தவரை நீட் என்பதை வேண்டாம் என்று தான் கூறுகிறோம். அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் சி பி எஸ் பி பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீட் தேர்வு நடத்தினால் நாங்கள் ஏற்போம்.
ஆளுநரைச் சந்தித்தது குறித்து ரஜினி பேசிய விவகாரத்தில் அரசியல் பேசினோம் அதைக் கூறமுடியாது என ரஜினி தெரிவித்தது கபாலியா அல்லது காவிக்குப் பயந்துவிட்டாரா என்பதை ரஜினி தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்