Kamal & Maya : சின்னத்திரையில் முதலில் நுழைந்து அதில் பெரும் வரவேற்பு பெற்று இப்போது வெள்ளித்திரையில் நல்ல சிறந்த நடிகராக மாறியுள்ளவர் தான் புகழ்.
அதே போல தொகுப்பாளர் குரேஷி அவர்களுக்கும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.
சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களின் மூலமாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இரு நல்ல திறமைசாளிகள் தான் புகழ் மற்றும் குரேஷி இருவரும்.
அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் இருவருக்கும் பெரிய அளவில் புகழ் கிடைத்தது.
இந்த சூழ்நிலையில் சின்னத்திரை நடிகராக இருந்த புகழ் இப்பொழுது வெள்ளித் திரையிலும் பல திரைப்படங்களில் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.
குறிப்பாக, “ஜூ கீப்பர்” என்ற திரைப்படத்தில் கதையின் நாயகனாக புகழ் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல குரேஷியும் தற்பொழுது வெள்ளித்திரையில் மெல்ல மெல்ல கால் பதிக்க துவங்கியுள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் துபாயில் பங்கேற்ற போது பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆனது.
அந்த வீடியோவில், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்பொழுது போட்டியாளராக இருக்கும் மாயா Kamal & Maya ஆகிய இருவரையும் தொடர்புபடுத்தி சில காமெடிகளை அவர்கள் மேடையில் பேசியுள்ளனர்.
அந்த வீடியோ தான் கடந்த சில தினங்களாக பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, அந்த வீடியோ உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புகழ் மற்றும் குரேஷி இருவரும் வீடியோ மூலமாக உலகநாயகன் கமலஹாசன் அவர்களுடைய ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளனர்.
மேலும், உலகநாயகன் அவர்களை பற்றி நம் அனைவருக்கும் தெரியும், இது நகைச்சுவைக்காக செய்யப்பட்டது மட்டுமே அன்றி வேறு எதுவும் அல்ல என்று கூறி,
நடிகர் புகழ் அவர்களும் குரேஷி அவர்களும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ : https://x.com/vaangasirikalam/status/1746116944217231839?s=20