நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது .
தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.சமீப காலமாக இன்றைய தலைமுறைகளுக்கு தேவையான பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் .
அந்தவகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது முழுவீச்சில் உருவாகி வரும் வரலாற்று திரைப்படம் தான் கங்குவா.
மிக பெரிய பட்ஜெட்டில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் .
ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார் . மேலும் இவர்களுடன் கோவை சரளா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
வரலாற்று படமாக உருவாகி வரும் கங்குவா 2024ல் உலகம் முழுவதும் பத்து மொழிகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் மிரளவைக்கும் கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது .
நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாளான இன்று (ஜூலை 23 நள்ளிரவு 12:01 AM) கங்குவா படத்தின் மாஸான கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை படக்குழு தெரிவித்துள்ளது.
இதோ அந்த கிலிம்ப்ஸ் வீடியோவை நீங்களும் பாருங்கள்