காரைக்கால் அருகே கொடூரம்:- திருநள்ளாரில் பாமக நிர்வாகி வெட்டிக்கொலை.. – கலவரத்தை தடுக்க 144 தடை..!

திருநள்ளாரில் பாமக பிரமுகர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்ட பாமக மாவட்ட செயலாளர் தேவமணி. திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கௌரவ தலைவராகவும் பதவி வகித்து வந்தார். திருநள்ளார் பகுதியை சேர்ந்த இவர், நேற்றிரவு திருநள்ளாறு தேரடி பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றுவிட்டு தனது ஆதரவாளர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரை எதிர்பார்த்து கொண்டிருந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை வழிமறித்து தேவமணியை சரமாரியாக வெட்டியது.

ரத்த வெள்ளத்தில் தேவமணி
ரத்த வெள்ளத்தில் தேவமணி

தேவமணியின் கை, தலை மற்றும் உடலில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த தேவமணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த  கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

கொலைக்கான காரணம் குறித்து அம்மாவட்ட போலீசார் தீவிரவிசாரணையில் இறங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு காரணமாக கூலிப்படை வைத்து தேவமணியை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு தேவமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கலவரம் பதற்றத்தை தடுக்கும் வகையில் திருநள்ளாறில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாமக மாவட்ட செயலாளர் திருநள்ளாரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காரைக்கால் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts