கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் சூறாவளி சுழற்சி நீடித்து வருவதால் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் எனவும், இடி மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அக்டோபர் 26 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், நாளை கோட்டயம், இடுக்கி, பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதோடு அணை பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.
மேலும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.