செங்கோட்டையில் தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி பறக்கும் என சர்ச தெரிவித்த அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சட்டமன்றத்திலேயே உணவருந்தி, உறங்கி எழுந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர் அமளி காரணமாக சட்டமன்றம் இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக கே.எஸ். ஈஸ்வரப்பா இருந்து வருகிறார். கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், காவிக்கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக எதிர்காலத்தில் மாறலாம். காவிக் கொடி செங்கோட்டையில் பறக்க விடப்படலாம் என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
தற்போது சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் முதல்வர் பசவராஜ் பொம்மை, சபாநாயகர் விஷ்வேஸ்வர் ஹெக்டே, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், ‘எதிர்க்கட்சி தலைவர்களை சமாதானப்படுத்த 2 மணி நேரமாக முயற்சி மேற்கொண்டோம். சட்டமன்றத்தில் படுத்து உறங்கி போராட்டம் நடத்த வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர்’ என்றார்.
இந்நிலையில், நேற்றிரவு கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் தலைமையில் சட்டமன்றத்தில் தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.
சட்டமன்ற கேன்டீனில் இரவு உணவை முடித்துக் கொண்டு, அலுவல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே அவர்கள் உறங்கினர். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
It is a matter of pride in our country and of protecting it's honour and the dignity of the national flag.
How can the party that built India stand back and watch as others insult it? The dharna will continue until a sedition case is filed against @ikseshwarappa#DeshadrohiBJP pic.twitter.com/TQlte5NvPO— Karnataka Congress (@INCKarnataka) February 17, 2022