நடிகை கீர்த்தி சுரேஷ் (keerthy suresh) ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் (keerthy suresh) தமிழில், உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வருகிற ஜூன் 29-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாக ‘சைரன்’ என்கிற திரைப்படத்திலும், இதுதவிர ‘ரிவால்வர் ரீட்டா’, ‘ரகுதாதா’ போன்ற படங்களிலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
வரிசையாக அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அடிக்கடி காதல் கிசுகிசுக்களிலும் சிக்கி வருகிறார். அந்த வகையில், அனிருத் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய கீர்த்தி நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று விளக்கம் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் வதந்திகள் பரவியதை அடுத்து அவரது தந்தை அதனை திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், ஆண் நண்பர் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாக பரவிய நிலையில், தற்போது மீண்டும் காதல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
ஒருவேளை இவர் தான் கீர்த்தியின் காதலராக இருப்பாரோ? என சந்தேகப்பட்ட நெட்டிசன்கள், இது யார்ரா? என வலைவீசி தேடிய போது, இவரும் கீர்த்தி சுரேஷின் நண்பர் தான் என்பது தெரியவந்துள்ளது.