கேரளாவில் எட்டு வயது சிறுமி செல்போன் வெடித்து (mobile phone explodes) பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பட்டிப்பறம்பு என்ற பகுதியில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் எட்டு வயது மகள் ஆதித்யா ஸ்ரீ நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் மொபைல் போனில் (mobile phone explodes) வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென அந்த மொபைல் போன் வெடித்து சிதறியதால் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மொபைல் போன் வெடித்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், உயிரிழந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார் என்றும், இவருடைய தாய் கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.
மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து, குழந்தைகளிடம் அதிக நேரம் மொபைல் ஃபோனை கொடுக்க வேண்டாம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.