கேரள மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடத்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் இருக்கக்கூடிய சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் இன்று காலை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது .

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்துள்ளது . இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமணியில் அனுமதிக்கப்பட்டுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாடு – கேரளா எல்லைகளில் இருக்கக்கூடிய சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் முழு ஆய்வுக்கு பின்னரே தமிழகப் பகுதிக்கு அனுமதிக்கப்படுகிறது.

பிராத்தனை கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல் கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டும் முக்கிய பகுதிகளில் தீவரை வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.