கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் பலத்த மழை பெய்தது.கடந்த 24 மணி நேரத்தில் கோழிக்கோடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் சில இடங்களில் 14 செ.மீ மழைப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் சில இடங்களில் 12 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
இடுக்கி மாவட்டம் ஏட்டுமானூர் – பீளமேடு சாலையில் சிறிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மேலும் இடுக்கி மற்றும் கோழிக்கோடு தவிர, மற்ற பிசகுகளில் ஜூலை 19 முதல் 22 வரை IMD சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் மலப்புரம் மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ஜூலை 19ம் தேதியும், காசர்கோடு மாவட்டத்திற்கு ஜூலை 20ம் தேதியும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மேல் ‘அதிக கனமழை’ பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை IMD விடுத்துள்ளது.கடல் சீற்றமாக இருப்பதால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையையும் சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் எச்.தினேசன் தெரிவித்தார்.