கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் மலையாற்று வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தொடர் மழையால் வயநாட்டில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து 2 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் 135 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
Also Read : உயிர்சேதம் ஏற்படுத்திய நிலச்சரிவு – வயநாடு செல்கிறார் பிரதமர் மோடி..!!
இந்த துயர சம்பவத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக அவசர உதவிக்கு 9656938689, 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்குச் சுற்றுலா சென்றவர்களைத் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை (1070) தொடர்பு கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.