விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று வெற்றிகரமாக (Competitions Complete) முடிவடைந்துள்ளது .
சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கடந்த ஜன.19 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
ஜன.23 அன்று தொடங்கி ஜன.31 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வந்தன .
இந்த விளையாட்டு போட்டியில் தடகளம் ,கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல்,
ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது .
இதேபோல் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்றிருந்தனர் .
சுமார் 2 வாரங்கள் நடைபெற்ற இப்போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த (Competitions Complete) நிலையில் இதன் நிறைவு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது .
இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றிவாகை சூடிய வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கினார் .
மகாராஷ்டிரா அணி 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2ஆம் இடத்தை கைப்பற்றியது.
Also Read : https://itamiltv.com/admk-will-not-allow-caa-act-to-affect-people/
கடந்தாண்டு 8ஆம் இடத்தை பிடித்த தமிழ்நாடு அணி இந்தாண்டு 2ஆம் இடத்தை பிடித்து மாபெரும் சாதனை சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து சோதனைகள் பல கடந்து சாதனை படைத்த அணைத்து வீரர் வீராங்கனைகளுக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் தற்போது வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.