இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு மாறும் கேலோ இந்தியா வரலாற்றில் முதன்முறையாக டாப்-3 இடங்களுக்குள் தமிழ்நாடு வந்துள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udayanidhi pride) தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் கடந்த ஜன.19 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
ஜன.23 அன்று தொடங்கி ஜன.31 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வந்தன .
சுமார் 2 வாரங்கள் நடைபெற்ற இப்போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இதன் நிறைவு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது .
இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றிவாகை சூடிய வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கினார் .
மகாராஷ்டிரா அணி 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு அணி 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களுடன் 2ஆம் இடத்தை கைப்பற்றியது.
இதையடுத்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Udayanidhi pride) கூறியதாவது:
இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு அனைத்து தகுதிகளும் இருக்கிறது; இதுவரை எத்தனை அத்தியாயங்கள் நடைபெற்று இருந்தாலும்
தமிழ்நாடு இந்த முறைதான் பதக்கப்பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ளது; இதற்கு திமுக அரசு எடுத்த முயற்சிகள் தான் காரணம் . இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு மாறும்
Also Read : https://itamiltv.com/nirmala-will-present-the-interim-budget-presentation-today/
கேலோ இந்தியா வரலாற்றில் முதன்முறையாக டாப்-3 இடங்களுக்குள் தமிழ்நாடு வந்துள்ளது.
இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ்நாடு இருப்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளதை கேலோ இந்தியா விளையாட்டுகள் மூலம் நிரூபித்துள்ளோம்.
திறமையான வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சியளித்ததால் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு 2-வது இடத்தை பெற்றுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.