விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் Nila Raja Balu துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்று அசத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் ஜன.19 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
ஜன.23 அன்று தொடங்கி ஜன.31 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் மட்டுமல்லாமல் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களிலும் நடைபெற்று வருகின்றன .
இந்த விளையாட்டு போட்டியில் தடகளம் ,கால்பந்து, கபடி. வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல்,
ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது .
இதேபோல் நாட்டின் 36 மாநிலங்கள் மற்றும் மத்திய நிர்வாகப் பகுதிகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் 5,500-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1,600க்-கு மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர் .
இந்நிலையில் இன்று துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவினருக்கான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் நிலா ராஜா , எஸ்.எம்.யுகன் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்று அசைத்தியுள்ளது .
Nila Raja Balu அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகளும், தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்க வென்ற வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது
இதுமட்டுமின்றி இன்று நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் ஆடவருக்கான 89 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் தீர்ஷான் வெண்கலப் பதக்கம் வென்றார்.
Also Read : https://itamiltv.com/animal-exchange-between-tamil-nadu-and-uttar-pradesh/
சாலையோர சைக்கிள் பந்தயத்தில் ஆடவர் பிரிவில் தமிழகத்தின் எஸ்.நிதின் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
எந்த விளையாட்டாக இருந்தாலும் களம் புகுந்து வெற்றி கண்டு சாதனை படைத்து வரும் தமிழ்நாடு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.