அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், (kilambakkam bus) ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு செயல்ப்பட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தலைநகரம் சென்னைக்கு வந்திறங்கும் முக்கியமான பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது . இதற்கு மக்கள் மத்தியில் ஆதரவும் கிடைக்கிறது சில எதிர்ப்புகளும் கிடைக்கிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு
பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை அரசு கொன்னுடவந்துள்ளது என குறை கூறி வருகிறார்கள்.
கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடைகள், உணவகங்கள் என ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது .
தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட தென்சென்னை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், ஏற்கனவே பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், இந்த இடமாற்றத்தால் யாருக்குமே எந்தப் பலனும் இல்லை.
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துக் கட்டணத்தை விட, சென்னையின் பல பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோயம்பேடு மற்றும் சென்னையின் பிற பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திற்கும் இடையே ஐந்து, பத்து நிமிட இடைவெளியில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுவும் சரிவர இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளும், சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் வரை செல்லும் பயணிகளுக்கான போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்படும் வரை,
அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் (kilambakkam bus) மீண்டும் கோயம்பேட்டில் இருந்தே செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்:
பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நள்ளிரவு நேரத்தில்தான் எழுந்துள்ளது. காலை, மாலை போன்ற நேரத்தில் பிரச்னை இல்லை
நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் திருச்சிக்கு சென்றன. அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகள் அனுப்பப்பட்டன
அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர்
கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் செய்கின்றனர்.
முடிச்சூர் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.