ரஷ்யாவில் நடைபெற்ற Amur Autumn சர்வதேச திரைப்பட விழாவில் Grand Prix பிரிவில் சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் விருது வென்று அசத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவர்கார்த்திகேயனின் அசத்தலான தயாரிப்பில் உருவான திரைப்படமே கொட்டுக்காளி.
சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கூழாங்கல் திரைப்படத்தின் இயக்குனர் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி உள்ளார்.
கிராமத்து கலை மாறாமல் கிராமிய பின்னணி கொண்ட கதையாக உருவான இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல சர்வதேச விருதுகளை வென்ற நிலையில் கடந்த மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படம் மீண்டும் ஒரு சர்வேதேச விருதினை வென்றுள்ளதாக டக்கரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற Amur Autumn சர்வதேச திரைப்பட விழாவில் Grand Prix பிரிவில் சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படம் விருது வென்று அசத்தியுள்ளது. இவ்விருதினை படத்தின் இயக்குநர் வினோத் ராஜ் நேரில் சென்று பெற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் பல வெளிநாட்டினர் மத்தியில் தமிழில் பேசியும் அசத்தியுள்ளார்.