Landslide in Papua New Guinea : பப்புவா நியூ கெனியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பலி எண்ணிக்கை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.
பப்புவா நியூ கெனியா நாடு தென்மேற்கு பசுபிக் கடலோரத்தில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இந்த கொடூர சம்பவத்தின் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரிவதற்கு முன்பாகவே நிலச்சரிவில் சிக்கி உயிரை இழந்தனர்.
இதையும் படிங்க : முல்லைப் பெரியாறு விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
இந்த நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்ற வருகின்றது. ராட்சத இயந்திரங்களுடன் மீட்பு பணிகளை உள்ளூர் நிர்வாகம் முடித்துள்ளது Landslide in Papua New Guinea.
இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் பரப்பளவு அதிகமாக இருப்பதாலும், பாறைகளும், மரங்களும் நிறைந்து காணப்படுவதாலும் மீட்பு பணிகள் சற்று சவால் நிறைந்ததாகவே உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே இந்த திடீர் நிலச் சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக பப்புவா நியூ கினியா நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபே தெரிவித்துள்ளார்.
மேலும் பாதுகாப்பு படைகள் மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், எங்கா மாவட்ட அதிகாரிகள் மறு சீரமைப்பு பணிகளை தொடங்கி இருப்பதாகவும் பிரதமர் ஜேம்ஸ் மராபே கூறியுள்ளார்.
இந்த நிலச்சரிவு குறித்த முழு தகவல் கிடைத்த பிறகு பலியானவர்களின் எண்ணிக்கை பற்றிய முழுமையான விவரங்களை அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.