#BREAKING | ஆந்திர பிரதேசம்: பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 4 யானைகள் (Elephant) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் வசித்து வரும் யானைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
இது குறித்து வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் மின்வேளி அமைத்துள்ளனர்.
இந்த நிலையில்,ஒடிசாவில் இருந்து வந்த யானை கூட்டம் ஒன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், நேற்று இரவு ஆறு யானைகள் விளைநிலத்தில் புகுந்தது.
அப்போது மின்சாரம் பாய்ந்து நான்கு யானைகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மின்வேலியில் சிக்கிய மேலும் 2 யானைகள்(Elephant) நூலிழையில் உயிர் தப்பின.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த வனதுறை அதிகாரிகள் விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.