தலைவரின் அன்புகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் படு மிரம்மாண்டமாக உருவாகியுள்ள லால்சலாம் படம் குறித்த சில முக்கிய தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் கதயநாயகர்கள் பட்டியலில் தாப் 10 இடத்திற்குள் இருபவர்க்ள விஷ்ணு விஷால், விக்ராந்த் . இவர்களின் கூட்டணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அன்புமகளான ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படமே ‘லால் சலாம்’
கிரிக்கெட்டை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் கேமியோ ரோலில் நடித்துள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது . அதன்படி இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதகவும் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரென் ஜெயண்ட் நிறுவனம் தட்டி தூக்கி உள்ளதகவும் படக்குழு ஸ்பெஷல் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு பல படங்கள் வெளியாக காத்திருக்கும் நிலையில் தற்போது ‘லால் சலாம்’ படமும் பொங்கல் ரேஸில் கலந்துகொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.