பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் பெண்களை பின்தொடர்ந்து சென்றால் 5 வருடம் சிறை தண்டனை.
பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் கடுங்காவல் LN தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றத்தின் தீவிரத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம்
Also Read : மின்வாரியத்தில் ஊழல் – கேள்விகளால் போர் தொடுக்கும் அன்புமணி..!!
ஒரு நபர் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம்.
பெண்கள் மீது ஆசிட் வீசும் குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் 10 வருட சிறை அல்லது ஆயுள் தண்டனை.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 வருடம் சிறை தண்டனை என முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்த புதிய சட்ட திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.