அரசியல் வட்டாரத்தில் விஜய் என்பவர் விஜயகாந்தை போல் அல்லாமல் விஜயகாந்தின் ஆளுமை திறனையும் ரஜினியை போல் இளைஞர் பட்டாள பலம் கொண்டவராக திகழ்வதால் தான் அரசியல் கட்சி தலைவர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராவுத்தர் இப்ராஹிம் பகீர் கருத்து தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் லலித் குமார் தயாரித்திருக்கும் திரைப்படம் தான் லியோ. இதில் விஜயுடன் திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், தமிழ் நடிகர் அர்ஜுன், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக லியோ படத்தின் போஸ்டரை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டிருந்தனர். அந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
முன்னதாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் ECR-ல் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் ,பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் உள்ளிட்ட டிக்கெட் விற்பனை பல்வேறு குளறுபடி நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில்,இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லியோ பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மறைமுகமாக அரசியல் எதிர்ப்புகள் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராவுத்தர் இப்ராஹிம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது ITAMIL வலைதளத்தில் அளித்த முழு நேர்காணல் வீடியோ காண :
LINK👉 : https://fb.watch/nkRPhBydF3/