தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் LKG ,UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ் நாட்டில் 2,381 அரசு தொடக்க ,நடுநிலைப் பள்ளிகளுக்கு அமைந்த அங்கன்வாடி மையங்களில் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட இந்த ஓராண்டாக பல்வேறு முயற்சிகளின் காரணமாக சுமார் 7லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் கூடுதலாகக் கடந்த கல்வியாண்டில் 3000 வகுப்புகள் (Sections) தொடங்கப்பட்டன.மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையே அதிகரித்ததால் ,அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் தேவை அதிகரித்தது.
இந்த நிலையில் தான் LKG., UKG., வகுப்புகளை அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் எனப் பெற்றோர்களின் கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் LKG.,UKG., வகுப்புகள் தொடர்ந்து நடைபெறப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது