வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு ( Mansoor Alikhan ) எண்ணிக்கையில் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி வெற்றிகரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் பாரத நாட்டில் அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது EVM இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Also Read : விருதுநகர் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முன்னிலை..!!
அந்தவகையில் வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு எண்ணிக்கையில் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
வேலூரில் பொதுவாக இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் திமுக ஐந்து முறையும் , காங்கிரஸ் மூன்று முறையும் , அதிமுக பாமக தலா ஒரு இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் வேலூரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 500க்கும் குறைவான ( Mansoor Alikhan ) வாக்குகளே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . அந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.