கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார் .
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
நான் ஒரு மருந்து சொன்னேன்; அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னை கிண்டல் செய்கிறார்; ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல.
இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது.
Also Read : கூட இருப்பவர்களின் கழுத்தறுப்பது அண்ணாமலைக்கு கைவந்த கலை – திருச்சி சூர்யா விமர்சனம்..!!
கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை மற்றும் அதிர்ச்சியளிக்கிறது திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரிப்பு.
ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா போதை விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அப்படி மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.