மத்தியப் பிரதேச மாநிலத்தில் பர்வானி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதிய அனைத்து ( FAIL ) மாணவர்களும் தேர்ச்சி பெறாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பர்வானி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இருந்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 85 மாணவர்களும் தேர்ச்சி பெறாத அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது . மேலும் அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 75 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பள்ளிகல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, அப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறையால் காமர்ஸ் பிரிவு ஆசிரியரே மாணவர்களுக்கு கணிதப் பாடம் கற்பித்தது வந்தது அம்மாநில பள்ளிகல்வித்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு பள்ளியில் போதுமான அளவு அசையர்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்ச்சி ( FAIL ) பெறாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.