Admk Flag-அதிமுக கொடி, சின்னம், உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட4 பேரை கட்சியில் இருந்து நீக்கியும்,
பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதை எதிர்த்து ஓ .பன்னிர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவர் உட்பட 4 பேரை நீக்கி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/01/image-175.png?resize=928%2C557&ssl=1)
இந்த நிலையில், அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும்,
அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் , “அதிமுக பொதுச்செயலாளர் என என்னை உயர் நீதிமன்றம் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார்.
Also Read :https://itamiltv.com/dmk-hindu-against-narayanan-tirupati-has-expressed-a-shocking-opinion/
இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. எனவே அதிமுக பெயர். கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து,
தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை எதுவும் விதிக்கவில்லை.
எனவே, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,
Also Read :https://x.com/ITamilTVNews/status/1745321316289524197?s=20
அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து,வழக்கை நவ.30க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, அதிமுக கொடி, (Admk Flag)சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை விதித்தது செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்