மதுரை எய்ம்ஸ் (Madurai aiims) மருத்துவமனை கட்டுமான பணிக்கு, சுற்றுசூழல் அனுமதிக் கோரி மருத்துவ நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை (Madurai aiims) அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதற்காக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
45 மாதங்களுக்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என பிரதமர் தெரிவித்த நிலையில், இது வரையில் அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது.
பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் விரைவில் கட்டுமான பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதைய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒத்த செங்கல்லை கையில் வைத்து எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியது பரபரப்பாக பேசப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமான பணிகள் தாமதமாவது குறித்து மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் செங்கல் காட்டி பேசியது எளிதாக புரிந்து கொள்ளும்படி அமைந்தது.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் செங்கலுடன் உதயநிதி ஸ்டாலின் வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : kilambakkam பேருந்து நிலையம்: முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை (Madurai aiims) குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்காகச் சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1751977357299351651?s=20
இதில், உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், அவரச சிகிச்சை பிரிவு, மருத்துவக் கல்லூரி, நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளன. இதற்காகவே சுற்றுசூழல் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.