மதுரை சித்திரை திருவிழா கீழ மாசி வீதியில் உள்ள தேரடி கருப்பண்ணசாமி கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
மதுரை சித்திரை திருவிழாவிற்கான முகூர்த்த கால் நடும்விழா மதுரை கீழமாசிவீதியில் உள்ள தேரடியில் பட்டர்கள் சிறப்பு பூஜை செய்து மூர்த்த கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தேரடியில் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மீனாட்சி கோயில் துணை ஆணையர் அருணாசலம், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவை தொடர்ந்து கோயிலின் சித்திரை திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடங்க உள்ளன.
சித்திரை திருவிழா மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா – ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் அதிகார பூர்வ அறிவித்து உள்ளதை தொடர்ந்து விழாவிற்கான அனைத்து ேவலைகளும் மும்முரமாக நடைபெற துவங்கியுள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற மிக பழையான கோவில்களில் ஒன்றாக உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடக்கும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை திருவிழா.
இந்த சித்திரை திருவிழாவானது மதுரை மட்டுமின்றி பல மாவட்ட மக்களும் கொண்டாடும் விழாவாக இருந்து வருகிறது.
15 நாட்கள் திருவிழாவான சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள்
இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் பக்தர்கள் அனுமதியுடன் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான தேதிகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றமும், ஏப்ரல் 30ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும்,
மே – 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மே 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது எனவும்
இதேபோன்று கள்ளழகர் கோவிலை பொறுத்தமட்டில் மே 4ம் தேதி இரவு கள்ளழகர் எதிர்சேவையும், மே 5 ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சித்திரை திருவிழாவிற்கான அனைத்து முன்னேற்பாடு வேலைகளையும் கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர்