மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .
தமிழ் நாட்டில் முக்கியமான காய்கறி சந்தைகளில் முக்கியமானது மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தை . இந்த சந்தைகளில் இருந்து மதுரையின் பல பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு காய்கறிகளில் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
Also Read : யூடியூபர் சவுக்கு சங்கர் விடுதலை!
அந்த வகையில் இன்று மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளின் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதன் படி இன்றைய காய்கறிகளின் விலை நிலவரங்கள் குறித்து பார்க்கலாம்.
15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி விலை 350ல் இருந்து 600 ஆக அதிகரிப்பு
கடந்த வாரம் ஒரு கிலோ 60க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் தற்போது 90க்கு விற்பனை செய்யப்படுகிறது
ஒரு கிலோ கேரட் விலை 50ல் இருந்து 70ஆகவும், ஒரு கிலோ வெங்காயம் 40ல் இருந்து 60ஆக உயர்ந்துள்ளது.