அடைந்த ஆக்ஸ்ட் 17ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 60க்கும் மேற்பட்டோர் யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.
நேற்று நாகர்கோயில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை மதுரை வந்தடைந்த இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை போடி லயனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அந்த நேரத்தில் ரயில் பெட்டியில் இருந்த பக்தர்கள் சிலிண்டர் மூலம் உணவு சமைக்க முற்பட்ட போது
தீப்பற்றி உள்ளது. இதனை அடுத்து யாத்திரை பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடி உள்ளனர்.
அப்போது ரயிலில் இருந்து 60 பேர் கீழே இறங்கி விட்டதாகவும் மேலும், 4க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்த நிலையில், தீயணைப்பு துறையினர் ரயில் பெட்டியினை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் எஸ்எஸ் காலனி காவல் நிலைய போலீசாரம் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதையடுத்து, இந்த விபத்து குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
“மதுரையில் ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதுபற்றி விரிவான விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், தொடர்ந்து இந்த தீ விபத்து தொடர்பாக ரெயில் பயணிகளுக்கு உதவ, கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, 9360552608, 8015681915 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர், ரெயில்வே உயரதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் ரெயில் விபத்து பற்றி நேரில் சென்று ஆய்வு செய்தனர்.