உலகக்கோப்பை செஸ் போட்டியின் இன்று நடைபெற்ற 2 ஆவது ஆட்டமும் டிராவில் முடிந்தது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது.இதன் இறுதிப் போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் தகுதி பெற்றனர். இறுதிப் போட்டி 2 சுற்றுகளாக நடத்தப்பட்டது.
நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்னந்தா வெள்ளை காய்களுடனும், கார்ல்சென் கருப்பு காய்களுடனும் விளையாடி ஆட்டத்தை டிரா செய்தனர். இதனையடுத்து இன்று நடைபெற்ற 2 ஆவது சுற்றில் கார்ல்சன் வெள்ளைக் காய்களுடனும், பிரக்னந்தா கருப்புக் காய்களுடனும் விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 35வது ஓவரில் இரு அணிகளும் டிராவில் முடிவடைந்தன. ஆட்டத்தின் போது பிரக்னாந்தாவின் நேரம் குறைவாக இருந்தாலும், அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை டிரா செய்தார்.
மேலும் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு இந்திய மதிப்பில் ரூ. 91 லட்சமும், ஃபைனலில் தோல்வி அடைபவருக்கு ரூ. 66 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.
இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு, உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரக்னந்தா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார். இந்த இறுதிப் போட்டியில் பிரக்னந்தா வெற்றி பெற்றால் புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.