லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை (mahalakshmi) காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்ளுடைய திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி தங்களுடைய 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடினார்கள். அதுமட்டுமல்லாமல், எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள், கோவில், ஹோட்டல் என பொது இடங்களில் ஒன்றாக வலம் வருகின்றனர்.
இப்டி பிரபலமான இந்த ஜோடி சில முன்னணி யூடியூப் ஊடகங்களிலும் பேட்டி அளித்து வருகின்றனர். அது சம்மந்தமான புகைப்படங்களையம் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில், ரவீந்தர் வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே, ஏனெனில், அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சோகமான பதிவு ஒன்றை பகிர்ந்தார்.
அதனைப் பார்த்த ரசிகர்கள் ரவீந்தர் – மகாலட்சுமி (mahalakshmi) ஜோடி பிரிந்துவிட்டார்களா என்ற குழப்பத்தில் சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை அடுக்கி வந்தனர்.
இந்நிலையில், தற்போது அந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மகாலட்சுமி தன்னுடைய கணவரோடு ஜோடியாக எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “நீ என்னை சுற்றி கைகளை வைக்கும் போது இந்த உலகில் என்னால் முடியாதது எதுவுமே இல்லை.
நான் உன்னை முழு மனதுடன் நேசிக்கிறேன் அம்மு” எனக் பதிவிட்டுள்ளார். அதற்கு ரவீந்தரும், லவ் யூ பொண்டாட்டி என்று பதில் கொடுத்துள்ளார்.